சென்னையில் மூதாட்டியை கொன்ற 3 சிறுவர்கள்!
சென்னை: தனியே இருந்த மூதாட்டியைக் கொலை செய்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் லட்சுமி குட்டி (72) தனியாக வசித்து வந்தார்.
கடந்த மாதம் 27ம் தேதி லட்சுமி குட்டி கழுத்து அறுக்கப்பட்டு, வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாகக் கிடந்தார். பீரோவில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி வெளியூரில் வசித்து வந்த அவரது மகன் சுவாமி போலீசில் புகார் செய்தார். கொலையாளிகளைப் பிடிக்க வடசென்னை இணை கமிஷனர் சேஷசாயி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
விசாரணையில் லட்சுமி குட்டியின் வீட்டுக்கு எதிரே உள்ள லாண்டரி கடை உரிமையாளரின் பேரன் வேல்முருகன் (17) கொலை நடந்த நாளில் இருந்து தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவனைத் தேடிவந்தனர். இந் நிலையில் தாம்பரம் அருகே சேலையூரில் வேல்முருகன் பதுங்கியிருப்பது தெரிய வந்து அவனை மடக்கினர்.
அவனிடம் விசாரித்தபோது, லட்சுமி குட்டியை இவனும் எம்.ஆர். நகரைச் சேர்ந்த பழனி (15), சின்னாண்டி மடத்தை சேர்ந்த இளவரசன் (14) ஆகிய இரு சிறுவர்களும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.
வேல்முருகன் லாண்டரி செய்த துணியை கொடுப்பதற்காக லட்சுமி குட்டி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். அவர் தனியே வசிப்பதை அறிந்து அவரைக் கொன்று வீட்டிருந்த பணம், நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளான். கூடவே பழனி, இளவரசனையும் சேர்த்துக் கொண்டான்.
120 ரூபாய்க்கு கத்தி வாங்கிக் கொண்டு மூவரும் லட்சுமி குட்டி வீட்டுக்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். லட்சுமி குட்டி சமையல் அறைக்கள் நுழைந்ததும் மூவரும் அவரை பின் தொடர்ந்து சென்று ஒருவன் லட்சுமி குட்டியின் காலை பிடித்துக் கொள்ள மற்றொருவன் அவரது வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளான்.
அவர் சத்தம் போட்டதால் இன்னொருவன் அவரது கழுத்தை கத்தியால் அறுத்துள்ளான். அவரது வயிற்றிலும் கத்தியால் குத்தி அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு, தடயத்தை மறைக்கவும், போலீஸ் மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்கவும் லட்சுமி குட்டியின் உடல் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு, பீரோவில் இருந்த ரூ.5200 எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications