எஸ்வி சேகர்-அதிமுகவுக்கு டென்சன் மேல் டென்சன்!
சென்னை: சென்னை மைலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் புதிய அன்னதான கட்டிடம் கட்டும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர் பங்கேற்றார்.
பழமையான இக்கோயிலில் தினசரி அன்னதானம் திருக்கோயில் பிரகாரத்திலேயே வழங்கப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளதால் கோயில் எதிரில் உள்ள இடத்தில் அன்னதான கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்டாலினிடம் சேகர் கோரிக்கை மனு-அதிமுக டென்சன்
சட்டசபையில் அமைச்சர்களின் இருக்கைக்கே வந்து எம்எல்ஏக்கள் தொகுதி சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை கொடுப்பது வழக்கம். பெரும் ஆளும் கட்சி எம்எல்ஏக்களோ அல்லது தோழமைக் கட்சி எம்எல்ஏக்களோ தான் இப்படி மனு கொடுப்பார்கள். எதிர்க் கட்சிகள் அதைத் தவிர்த்துவிடுவர்.
இந் நிலையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர், துணை முதல்வர் ஸ்டாலினின் இருக்கைக்குச் சென்று ஒரு கோரிக்கை மனுவைத் தர அதை சிரித்தபடியே வாங்கிய அவர் குறிப்பெழுதி, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கொடுத்து அனுப்பினார்.
மேலும் அமைச்சர் மைதீன் கானுடனும் சிறிது நேரம் பேசிவிட்டு் தனது இருக்கைக்குத் திரும்பினார்.
இதை எதிர் வரிசையில் இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் டென்சனுடன் பார்த்தவாரே தங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அவையில் சிறிய அளவில் சலசலப்பு ஏற்பட்டது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications