குளியலறையில் வழுக்கி விழுந்தார் கெளடா-வலது கையில் ஆபரேஷன்
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவே கெளடா தனது வீட்டில் உள்ள குளியலறையில் நேற்று வழுக்கி விழுந்தார். இதையடுத்து காயமடைந்த அவரது வலது கையில் லேசான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவே கெளடாவின் வீடு பெங்களூரில் உள்ள பத்மநாப நகரில் இருக்கிறது. 76 வயதான அவர் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார்.
அப்போது கதவை திறக்க முயன்ற போது அவர் நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். அதில் அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள மல்லையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது கையில் காயம் பலமாக இருப்பதால் டாக்டர்கள் அவருக்கு வலது கையில் லேசான அறுவை சிகிச்சை செய்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் அவர் பெங்களூர் தனியார் ஹோட்டலில் நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையி்ல்,
பாஜக அரசு கீழ்த்தரமான அரசியல் செயல்பாட்டினை ஒதுக்கிவிட்டு, வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள் உரம் மற்றும் விதைகள் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு போதிய உதவிகளை செய்ய வேண்டும் என்றார் தேவே கெளடா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications