தோழியருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி மாடியிலிருந்து விழுந்து பலி
சென்னை: சென்னை தரமணியில், கல்லூரி விடுதியின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த 20 வயது மாணவி, தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த மாணவியின் பெயர் மான்சி கத்தானி. ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் கல்லூரியில் படித்து வந்தார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் தரமணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
சனிக்கிழமை தனது தோழியருடன் விடுதி மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்து விட்டார். கட்டடங்களின் வழியாக கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை அடையாரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி டீன் ஸ்ரீகுமார் மேனன் கூறுகையில், எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது யாருக்கம் சரியாக தெரியவில்லை. மாடிப் படையின் சுற்றுச் சுவரில் அமர்ந்தபோது தவறி விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
மலர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார் என்றார்.
மாடிக்கு யாரும் செல்லக் கூடாது என்று விடுதி நிர்வாகம் மாணவிகளை அறிவுறுத்தியிருந்ததாம். ஆனால் அதை மீறி மாணவிகள் பேசச் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த விபரீதம் நடந்து விட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications