பிரான்ஸ், எகிப்து பயணம் - தொடங்கினார் மன்மோகன் சிங்
டெல்லி: பிரான்ஸ், எகிப்து ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கினார்.
எகிப்து நாட்டில் அணி சேரா நாடுகள் மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்கிறார் பிரதமர். அதேபோல பிரான்ஸ், தேசிய தின கொண்டாட்டத்திலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் மன்மோகன் சிங்.
இதற்காக அவர் இன்று பிரான்ஸ் கிளம்பிச் சென்றார். பாரீஸ் செல்லும் பிரதமர் அங்கு பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்தியப் படையினர் அணிவகுப்பு..
தேசிய தின கொண்டாட்டத்தின்போது நடைபெறும் அணிவகுப்பில், இந்திய ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு அணிவகுக்கவுள்ளனர். 400 வீரர்கள் கொண்ட இந்தியப் படைப் பிரிவு அணிவகுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு உலகப் போர்களிலும் இந்தியா பங்கேற்றதைக் கவுரவிக்கும் வகையில், இந்திய வீரர்கள் அடங்கிய அணிக்கு முதல் முறையாக பிரான்ஸ் அனுமதி வழங்கியுள்ளது.
நாளை நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களை முடித்து விட்டு பாரீஸிலிருந்து எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகருக்குக் கிளம்புகிறார் பிரதமர். அங்கு நடைபெறும் 15வது அணி சேரா நாடுகள் அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்த பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, வங்கதேசம், நேபாள நாட்டு தலைவர்களையும் சந்திக்கிறார் பிரதமர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications