ராகுல் தொகுதியில் மின் வெட்டு-மக்கள் போராட்டம்
அமேதி: ராகுல் காந்தியின் தொகுதியான உ.பி. மாநிலம் அமேதியில், தொடரும் மின்வெட்டால் மக்கள் வெகுண்டெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்ட அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்னர். மேலும், மின் வெட்டு அடிக்கடி தொடர்ந்தால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரமுகர்கள், வக்கீல்கள், வியாபாரிகள் சகிதம் இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்வெட்டைக் கண்டித்து தொகுதி முழுவதும் பேனர்கள், தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொகுதி முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தையடுத்து பதட்டம் நிலவுவதால் மாவட்ட நிர்வாகம் அமேதி தொகுதிக்குட்பட்ட கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
கடந்த வாரம் மின்வெட்டு தொடர்பாக பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டன.
அமேதி தொகுதியில் ஒரு நாளைக்கு 6 முதல் எட்டு மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் உள்ளது. மற்ற நேரங்களில் மின்வெட்டு உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications