கேரளாவுக்கு கடத்த முயன்ற 216 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கடத்தி விற்க முயன்ற 216 ரேஷன் அரிசி மூட்டைகளை கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம், பறக்கும் படை தாசில்தார் சுப்ரமணியம் ஆகியோர் மாவட்ட எல்லையான நேரலகிரி அருகே திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கர்நாடகாவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 216 மூட்டை ரேசன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ 2 லட்சத்து 7 ஆயிரத்து 400 என கூறப்படுகின்றது.
இதனையடுத்து, லாரி டிரைவர் சிவஞானம்(30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரிசியை கர்நாடக மாநிலம் பங்காரு பேட்டைக்கு கடத்திச் சென்று அங்குள்ள நவீன அரிசி ஆலைகளில் பாலிஷ் செய்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் கிருஷ்ணகிரி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் வழியாக கேரள மாநிலம் வைக்கத்திற்கு மீண்டும் கடத்திச் செல்லும் வழியில் இந்த அரிசி மூட்டைகள் லாரியுடன் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications