வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி!
Subscribe to Oneindia Tamil
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி கடலில் குளித்த இளைஞர்கள் இருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
தஞ்சை மானம்புசாவடி சிவராயன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சேதுராமன் (24). தஞ்சை கணேசன் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (30).
இருவரும் தங்களது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றனர். கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கோவிந்தராஜ், சேதுராமன் ஆகிய இருவரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications