மும்பையில் பேய் மழை!-ஸ்தம்பித்தது நகரம்!!
மும்பை: மும்பையில் நேற்று இரவு முதல் இன்று மாலை வரை கொட்டித் தீர்த்த பலத்த மழையால் நகரமே ஸ்தம்பித்துப் போனது. இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. ரயில், சாலைப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.
பலத்த காற்றுடன் நேற்று இரவு முழுவதும் மும்பையை மழை விளாசித் தள்ளியது. இந்த மழை இன்று மாலை வரையிலும் விடாமல் கொட்டித் தீர்த்ததால் நகரமே வெள்ளக்காடாகியுள்ளது.
புறநகர் ரயில்கள் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால் நெடு நேரம் தாமதமாக சென்றன.
கிங்ஸ் சர்க்கிள், சியோன், அந்தேரி மிலன் சப்வே, ஹிந்த் மாதா ஆகிய பகுதிகளில் நீரில் மிதக்கின்றன.
சர்வதேச விமான நிலையத்தில் வெளிச்சம் குறைவாக இருந்ததால், போக்குவரதது பாதிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே மும்பையில் இந்த சீசனில் பலத்த மழை பெய்வதும், இதனால் நகரமே ஸ்தம்பித்துப் போவதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் மழை நீர் வடிகாலுக்காக பல லட்சம் பணத்தை செலவு செய்வதாக மாநகராடசி கூறுகிறது. ஆனால் சாதாரண மழை பெய்தாலே மும்பை முங்கிப் போய் விடுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. முக்கியச் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடுவதால் பஸ்கள் ஓடவில்லை. வாகனங்களையும் ஓட்டிச் செல்ல முடியவில்லை.
இதன் காரணமாக ரயில் நிலையங்கள், விமான நிலையத்திற்கு வர முடியாமல் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
கன மழை காரணமாக அந்தேரி சப்வே மூடபப்ட்டு விட்டது.
இன்று மாலை வரை கொலாபாவில் 93.4 மில்லிமீட்டர் மழையும், சான்டா க்ரூஸில் 125.6 மில்லிமீட்டர் மழையும் கொட்டியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையமும் பீதியை அதிகரித்துள்ளது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications