சேலம்-திருவாரூர் அதிமுக பிரமுகர்களுக்கு 'கல்தா'
சென்னை: சேலம், திருவாரூர் மாவட்ட அதிமுக பிரமுகர்கள் பலரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
கொடநாட்டில் ரெஸ்ட் எடுத்தபடி இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் கே.செங்கோட்டையன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கருப்பண்ணன், கொங்கணாபுரம் பேரூராட்சி அதிமுக அவைத் தலைவர் வேலு, கொங்கணாபுரம் அதிமுக செயலாளர் கந்தசாமி, கொங்கணாபுரம் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் முருகேசன், கொங்கணாபுரம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டுள்ளனர்.
கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதுடன், கட்சி கட்டுப்பாட்டை மீறி அதிமுகவுக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளனர்.
எனவே இவர்கள் அனைவரும் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உள்பட அனைத்தும் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
அதே போல் திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் பக்கிரிசாமியும் இன்று முதல் அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இன்றும் நாளையும் பாசறைக் கூட்டம்..
இந் நிலையில் வடசென்னை மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலையில் வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரி அருகில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாநிலச் செயலாளரும் சசிகலாவின் அண்ணன் மகனுமான டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்குகிறார்.
வடசென்னையில் 348 இளம் பெண்கள் பாசறைகளும் 671 இளைஞர்கள் பாசறைகளும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இளம் பெண்கள் பாசறையில் 12,053 பேரும், இளைஞர்கள் பாசறையில் 21,495 பேரும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக அதிமுக கணக்கு கூறுகிறது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications