Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோட்டை முன் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன் அனுமதி பெறாமல் கோட்டை முன் யார் போராட்டம் நடத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாணவ சங்கத்தினர் நேற்று கோட்டை முன் தடையை மீறி மறியல் போராட்டம் நடத்த முயன்றபோது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 12 மாணவ, மாணவிகளுக்கு மண்டை பிளந்தது. இது தொடர்பாக 10 மாணவிகள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில்,

நேற்று அகில இந்திய மாணவ சங்கத்தினர் சுமார் 70 பேர் கொடி மற்றும் பேனர்களுடன் ஊர்வலமாக வந்தார்கள். நகர காவல் சட்டப் பிரிவை மீறி முன் அனுமதி பெறாமல் தலைமைச் செயலகத்தில் அவர்கள் நுழைய முற்பட்டார்கள்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பேரவை நடந்து கொண்டிருக்கிறது; உள்ளே நுழையக் கூடாது என்று தடுத்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் அவர்களுடன் தகராறிலும் மாணவர்கள் ஈடுபட்டனர். சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் தலைமைச் செயலகத்தில் நுழையக் கூடாது என்று போலீசார் எச்சரித்ததையும் கேட்காமல் அக் கூட்டத்தினர் போலீசாரை தாக்கியதால் அவர்கள் வேறு வழியின்றி ஓரளவு பலத்தை பிரயோகித்து கூட்டத்தை கலைத்தனர்.

இதனால் ஒரு இன்ஸ்பெக்டருக்கும், 3 போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 16 பேர் காயமடைந்தனர். இவர்களில் 5 மாணவர்கள் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில் உள்ளனர்.

இது குறித்து விசாரித்ததில் வந்த 72 பேரில் 49 பேர் மாணவர்கள். மற்ற 23 பேர் மாணவர்கள் அல்லாதவர்கள் என்று தெரிகிறது. 49 மாணவர்களின் பெற்றோர்களுக்கும், கல்வி முதல்வர்களுக்கும் இவர்களுடைய சட்ட மீறல் குறித்த விவரங்களை போலீஸ் கமிஷனர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 147, 341, 353, 323, 118 ஆகிய 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த அரசு சமச்சீர் கல்வியை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினர் இதுபற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

தரமான சமச்சீர் கல்வியை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே சமயம் இந்த சமச்சீர் கல்வி முறையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் இந்த அரசு மிகுந்த அக்கறையோடும், எச்சரிக்கையோடும் செயல்படுகிறது. அதனால்தான் சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவதில் இந்த கால தாமதம் ஏற்படுகிறது.

சமச்சீர் கல்வியை ஏற்றுக் கொண்டுள்ள இடதுசாரிகள் ஆளும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களே அதை அமல்படுத்தவில்லை.

போலீஸ் அனுமதியின்றி சிலரின் தூண்டுதலின்பேரில் சட்ட விதிகளை மீறி கோட்டையில் நுழைய முற்பட்டதே நேற்றைய சம்பவத்திற்கு காரணமாகும்.

இனிமேல் சட்டமன்றம் நடக்கும்போதோ, நடக்காதபோதோ அனுமதி பெற்றே கோட்டை நோக்கி வர வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் யார் கோட்டை நோக்கி வந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.

மார்க்சிஸ்ட் கண்டனம்..

இந் நிலையில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமச்சீர் கல்வியை செயல்படுத்துவது உள்ளிட்ட மாணவர் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவ சங்கத்தினர் கோட்டை நோக்கி பேரணி நடத்தியபோது போலீசார் தடியடி நடத்தியுள்ளது. இதில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதை மார்க்சிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

உரிய சிகிச்சை..

நேற்றும் சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சனையை பாமக, அதிமுக ஆகியவை எழுப்பின.

கோட்டைக்கு எதிரில் ஜனநாயகரீதியாக தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, ஜனநாயகத்துக்கு மாறாக, சட்டத்துக்கு புறம்பாக, போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில், அவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தாக்கப்பட்டது பற்றி அரசு விளக்கம் தரவேண்டும் என்று அதிமுக கோரியது.

இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி,

கோட்டைக்கு எதிராக போராட்டம் நடத்தினால், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாக மட்டுமே போராட்டம் நடத்தவேண்டும். அதை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் யாராவது வந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவத்தில் மாணவர்கள் யாருக்காவது காயம்பட்டிருந்தால் உரிய மருத்துவ சிகிச்சை தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+