தயாநிதி தலைமையில் ஜப்பானுக்கு இந்திய குழு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தலைமையிலான ஜவுளித்துறை வர்த்தகக் குழு வருகிற 20ம் தேதி ஜப்பான் செல்கிறது.

மொத்தம் 17 உறுப்பினர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

குழுவில், ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (எஈபிசி), பருத்தி ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு, செயற்கை மற்றும் ரயான் ஆடைகள் மேம்பாட்டுக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள், திருப்பூர், கோயம்புத்தூரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

டோக்கியோவில் இம்மாதம் 22-ம் தேதி பிரம்மாண்டமான ஆடை மற்றும் ஜவுளி கண்காட்சி துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள இந்திய அரங்கினை மாறன் திறந்து வைக்கிறார்.

இம்மாதம் 24-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 44 இந்திய ஜவுளிகள் மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்கள், 50 அரங்குகளை பதிவு செய்துள்ளனர். ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவும், பருத்தி ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவும் இதில் பங்கேற்கின்றன.

ஜவுளிகள் மற்றும் ஆடை ஏற்றுமதியை பன்முகப்படுத்தவும், அமெரிக்க ஐக்கிய நாடுகளையும், ஐரோப்பிய கூட்டமைப்பையும் மட்டும் சார்ந்திருப்பதை தவிர்க்கவும், மத்திய அரசு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்குகிறது. இதற்காக லுக் ஈஸ்ட் என்ற கொள்கையை கடைபிடிக்கிறது. இதன் முக்கிய நோக்கம் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதுதான்.

உலகிலேயே ஜப்பான் நாடுதான் ஜவுளிகள் மற்றும் ஆடைகளின் மிகப் பெரிய நுகர்வோராக இருக்கிறது. ஆனால் இந்த நாட்டின் இறக்குமதி சந்தையில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவு. 1.12 விழுக்காடு மட்டுமே.

தனது இரண்டு நாள் பயணத்தின்போது, தயாநிதி மாறன் டோக்கியாவில் ஜப்பான்-இந்திய தொழில் ஒத்துழைப்பு குழுவால் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய ஜவுளித் துறையில் முதலீட்டை கணிசமாக ஈர்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

ஜவுளித் துறையை நவீனப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஸ்பின்னிங், நெசவு மற்றும் இத்துறை சார்ந்த பிற வசதிகளை மேம்படுத்த ஜப்பான் நாட்டின் முதலீட்டை பெறுவதற்கு ஏராளமான வாய்ப்புள்ளது. தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இத்துறைக்கான முதலீட்டை ஈர்க்க மத்திய அரசு முனைப்பாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்திய ஜவுளித் துறையை நவீனப்படுத்தவும், புதிய சந்தைகளை கண்டறியவும் ஜப்பான் நாட்டுப் பயணத்தை பயன்படுத்தி பல்வேறு கூட்டங்களில் உரையாற்ற அமைச்சர் தயாநிதி மாறன் திட்டமிட்டுள்ளார்.

மிகப் பெரிய தையல் எந்திர உற்பத்தி நிறுவனமான ஜூகி கார்ப்பரேஷனின் தலைவர் டாகியோ யமோகாவையும், ஜப்பான் நாட்டில் ஜவுளி எந்திரங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான கிர்லோஸ்கர் டயோடாவின் தலைவர் அகிரா ஒனிசியையும் மாறன் சந்தித்துப் பேசவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+