அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஜெ. ஆஜராக வேண்டும்-அரசு
சென்னை: அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி அந்த மக்களுக்கு போய் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அந்த நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்துக்கொண்டு விட்டாரோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது' என்று கூறியிருந்தார்.
இது முதல்வர் கருணாநிதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி தமிழக அரசின் வழக்கறிஞர் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
அதில், திரட்டப்பட்ட நிதி வங்கி டிமாண்ட் டிராப்ட் மூலம் மத்திய அரசு அனுமதியுடன் இலங்கை தமிழர்களுக்காக செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றும், இந்த விஷயத்தில் அவதூறு கூறிய ஜெயலலிதாவை இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தன் மீது வழக்கு தொடர சென்னை மாநகர அரசு வக்கீலுக்கு அதிகாரம் அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தனது மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி ராமநாதன், நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராவததற்கு 6 வாரத்திற்கு விதி விலக்கு வழங்கினார். மேலும் இது குறி்த்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கும் உத்தரவிட்டார்.
இந் நிலையில் பொது துறைச் செயலாளர் ஜோதிஜெகராஜன் மூலம் தமிழக அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில்,
ஜெயலலிதா மீது வழக்கு தொடர சென்னை மாநகர அரசு வக்கீலுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு சட்டப்பூர்வமானது.
முதலில் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முதல்வரின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் பேசியதால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டது. ஆனால் அதற்கு ஜெயலலிதா அளித்த பதில் திருப்தி தரவில்லை. எனவே தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர அரசு அனுமதி வழங்கியது. இதில் அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தவில்லை.
மேலும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நோக்கத்துடன் ஜெயலலிதா மீது இந்த வழக்கு தொடரப்படவில்லை. மக்கள் நல அரசு மற்றும் அதிகாரிகளின் பணி சவாலானது. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்பில் உள்ள அதிகாரத்தை கொண்டு அரசு நடக்கிறது.
இத்தகைய அரசு மீது பழி சுமத்தும் வகையில் ஜெயலலிதா கூறியுள்ளார். ஒவ்வொரு தனிமனிதனும் சட்டப்படி நன்மதிப்பை காத்துக் கொள்ளவும் அதற்கு தீங்கு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.
பொது ஊழியரை (முதல்வர்) களங்கம் சுமத்தும் வகையில் அவதூறு பரப்பினாலோ, கருத்து சுதந்திரத்தை தவறாக பரப்பினாலோ இதை அரசு பார்வையாளராக பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. பொது ஊழியர்களின் மரியாதையையும், நன்மதிப்பையும் காப்பதற்காக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை உள்ளது.
அரசு பிறப்பித்த உத்தரவு நன்கு ஆராயப்பட்ட பிறகுதான் அரசு வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் செசன்ஸ் நீதிபதியும் திருப்தி அடைந்த பிறகுதான் ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். கோர்ட்டு சம்மன் அனுப்பும்போது ஆஜர் ஆவது ஜெயலலிதாவின் கடமை.
ஒரு தடவை ஆஜர் ஆன பிறகு தனது நிலைமையை விளக்கி பிறகு கோர்ட்டில் ஆஜராக விதிவிலக்கு பெறலாம். ஆனால் ஒரு தடவை கூட ஆஜர் ஆகாமலேயே விதிவிலக்கு பெற முடியாது. எனவே அவர் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
எனவே அவருக்கு தரப்பட்ட விதி விலக்கை உயர் நீதிமன்றம் நீக்க வேண்டும், ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Jayalalitha: "அஇபுதமமுக"! ஆமா, ஜெயலலிதாவின் பெயரை சசிகலா தவிர்த்தது ஏன்? இந்த 5 காரணங்கள்தானா? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே












Click it and Unblock the Notifications