சென்னை பறக்கும் ரயில் நிலையங்களில் லிப்டுகள் வாங்கியதில் பல கோடி ஊழல்-சிபிஐ ரெய்ட்

இது குறித்து சிபிஐக்கு புகார்கள் வந்ததையடுத்து சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து தரமணி வரை உள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர்.
இந்த ரயில் நிலையங்களில் மொத்தம் 25 எஸ்கலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் 15 எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை. அதேபோல 15 லிப்டுகளில் 10 லிப்டுகள் மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளன.
தரமான நிறுவனங்களிடம் இருந்து இவற்றை வாங்காமல் சில மட்டமான நிறுவனங்களிடமிருந்து இதை ரயில்வே அதிகாரிகள் வாங்கியுள்ளனர். அதே நேரத்தில் இவற்றுக்கு சர்வதேச லிப்ட்- எஸ்கலேட்டர் நிறுவனங்கள் சொல்லும் விலை தரப்பட்டுள்ளது.
மேலும் இந்த லிப்டுகள் மற்றும் எஸ்கலேட்டர்களுக்கு பராமரிப்பையும் அந்த நிறுவனங்கள் வழங்கவில்லை. அதே நேரத்தில் பராமரிப்புக்கு என ஆண்டுதோறும் பணம் தரப்பட்டுள்ளது.
இயங்காத லிப்டுகளும், எஸ்கலேட்டர்கள் குறித்து ரயி்ல்வே அதிகாரிகள் கவலையும் கொள்ளவில்லை.
தரமணி ரயில் நிலையத்தில் 2 எஸ்கலேட்டர்கள் வாங்கி ஐந்து ஆண்டுகளாக அப்படியே ஓரட்டில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பிரித்துக்கூட பார்க்கவில்லை. இதனால் அவை அப்படியே துருப்பித்துப் போயுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகம்.
இந்த லிப்டுகள் மற்றும் எஸ்கலேட்டர்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதையடுத்து இதில் தவறு செய்த அதிகாரிகள் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications