திட்டமிட்டபடி பாலாற்றில் அணை- ஆந்திரா
ஹைதராபாத்: திட்டமிட்டபடி பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என்று ஆந்திர அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகாவைச் சேர்ந்த கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டத் திட்டமிட்டுள்ளது ஆந்திரா.
இதற்கு தமிழக அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.
ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஆந்திர அரசு தொடர்ந்து அது தொடர்பான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது கால்வாய் தோண்டும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
இதையடுத்து ஆந்திராவுடன் தண்ணீர்ச் சண்டை ஏற்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முதல்வர் ராஜசேகர ரெட்டி, மாநில பெரும் பாசனத் துறை அமைச்சர் பொன்னால லட்சுமய்யாவுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இதுவரை இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை. மாறாக சுமூகமாக பேசித் தீர்க்குமாறுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அணை கட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று முதல்வருக்கு எடுத்துக் கூறப்பட்டதாம். இதையடுத்து திட்டமிட்டபடி பணிகள் தொடரட்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளாராம்.
இதையடுத்து ரூ. 55 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிகளை திட்டமிட்டபடி தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளனர் ஆந்திர அதிகாரிகள்.
நேற்று தான் அணை கட்ட ஆரம்பிக்கவில்லை என்று லட்சுமய்யா கதை விட்டது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications