உபி காங் தலைவி பேச்சு-வருத்தம் தெரிவித்த சோனியா
டெல்லி: உ.பி. முதல்வர் மாயாவதி குறித்து உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி பேசியது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரீட்டா பேசியது தொடர்பாக அவரிடம் சோனியா விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்த காங்கிரஸ் வட்டாரம், ரீட்டாவை பதவி நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மாயாவதியை தரக்குறைவாக பேசியதாக கூறி ரீட்டா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டை பகுஜன் சமாஜ் கட்சியினர் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இந்த விவகாரத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உ.பி. மாநில நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்து நடந்தது என்ன என்பது குறித்து விசாரித்தார்.
ரீட்டா கைது மற்றும் அவரது வீடு கொளுத்தப்பட்டது குறித்து அவர் வேதனையும், அதிருப்தியையும் அவர்களிடம் வெளியிட்டார்.
அதேசமயம், ரீட்டாவின் பேச்சுக்காக தான் வருத்தமடைந்துள்ளதாகவும் சோனியா கூறினார். ரீட்டா ஜாமீனில் வெளியே வந்ததும் அவரிடம் தான் விளக்கம் கேட்கப் போவதாகவும் சோனியா கூறினார்.
இருப்பினும் ரீட்டாவின் விளக்கத்தைக் கேட்பதற்கு முன்பாக அவரை பதவியிலிருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ரீட்டாவின் பேச்சு அடங்கிய சிடியை அளிக்குமாறும் உ.பி. நிர்வாகிகளிடம் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளாராம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications