முல்லைத்தீவில் புலிகள் பதுக்கி வைத்த 1 டன் குண்டுகள் சிக்கின
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 1 டன் அளவிலான வெடிகுண்டுகளை ராணுவம் கண்டுபிடித்து மீட்டுள்ளது.
புலிகளுக்கான எதிரான போர் முடிந்த பின்னர் ராணுவம் கண்டுபிடித்துள்ள மிகப் பெரிய அளவிலான ஆயுதப் பறிமுதல் இதுவாகும்.
இந்த குண்டுகள் அனைத்தும் சாலையோரங்களில் புதைத்து வைக்கப்படும் குண்டுகளாகும். மொத்தம் 332 குண்டுகளை ராணுவம் எடுத்துள்ளது.
பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில்தான் இந்த ஆயுதப் பறிமுதல் நடந்துள்ளது.
ஒவ்வொரு குண்டும் 18 கிலோ எடை கொண்டதாகும். இந்தக் குண்டுகள் தவிர ஏராளமான தானியங்கித் துப்பாக்கிகள், மார்ட்டர் குண்டுகளும் சிக்கியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications