சாட்சி சொல்ல வராத துணை தாசில்தாருக்கு பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: வன்கொடுமை வழக்கில் சாட்சி சொல்லாமல் டிமிக்கி கொடுத்து வந்த துணை தாசில்தாருக்கு நீதி மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் வன்கொடுமை வழக்கு ஒன்று நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் சாட்சி சொல்ல தாராபுரம் மண்டல துணை தாசில்தார் தங்கமணி, தாராபுரம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோருக்கு நீதி மன்றம்
சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இருவரும் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தனர்.
இதனால் மண்டல துணை தாசில்தார் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோருக்கு ஈரோடு செசன்ஸ் நீதிபதி ஜெயசந்திரன் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications