குற்றால அருவியில் மூச்சு திணறி தொழிலாளி பலி

Subscribe to Oneindia Tamil

Murugesan
குற்றாலம்: குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த சென்னையை சேர்ந்த பிரபல ஹோட்டல் தொழிலாளி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இவர் சென்னை அடையாறு ஆனந்தபவன் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று 3 நண்பர்களுடன் குற்றாலம் வந்தார். இரவு 8 மணி அளவில் மெயின் ருவியி்ல் குளித்துக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுந்து வருகிறது. இவர் குளிக்கும்போதும் தண்ணீர் வரத்து அதிகரிக்கவே, அருவியில் குளித்துக் கொண்டிருந்த முருகேசன் மூச்சி திணறி ஆர்ச் பகுதியிலேயே இறந்துள்ளார்.

பின்னர் அவரது உடலும் அருகிலுள்ள தடாகத்தினுள் போய் சிக்கியதாக கூறப்படுகிறது.

அவருடன் குளித்து கொண்டிருந்தவர்கள் முருகேசனை காணவில்லை என்று தெரிந்ததும் குற்றாலம் போலீசில் புகார் செய்தனர். புகாரை தொடர்ந்து குற்றாலம் போலீசார் முருகேசனின் உடலை அருவி பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.

இன்று தடாகப் பகுதியில் நீச்சல் வீரர் கண்ணன் என்பவரை அழைத்து வந்து தேடவே முருகேசனின் உடல் தடாகத்தின் பாறை பகுதியில் சிக்கிக் கிடந்ததை வெளியே மீட்டு வந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+