திருப்பதி-இரவு நேர விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி: திருப்பதி கோவிலுக்கு வரும் சாதாரண பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய வசதியாக இரவு நேர விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
இகு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஆதிகேசவலு நாயுடு நிருபர்களிடம் கூறுகையில்,
திருப்பதி கோவிலுக்கு வரும் சாதாரண பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு இரவு நேர விஐபி தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இனி விஐபிக்கள் காலை நேரத்தில் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும்.
இதற்கு முன்பு கோவிலில் தோமாலை சேவை, அர்ச்சனை நடக்கும்போது கட்டண சேவை டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இனி இந்த நேரத்தில் சாதாரண பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
திருமலைக்கு வரும் வாகனங்களை நிறுத்த ஆழ்வார் டேங்க் அருகே 3 அடுக்கு 'பார்க்கிங் லாட்' கட்டப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications