ஸ்ரீவைகுண்டம் - மறைந்த செல்வராஜின் மனைவி போட்டியிட விருப்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து சமீபத்தில் மரணமடைந்த செல்வராஜின் மனைவி நளினி இத்தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கோரி ஜி.கே.வாசனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வருகிற 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் செல்வராஜின் மனைவி நளினியை நிறுத்த வேண்டும் மாவட்ட காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தனது மகன்கள் அமிர்தராஜ், ஆனந்தராஜ் மகள் ராஜபிரியா ஆகியோருடன் நேற்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை நளினி சந்தித்து ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தான் போட்டியிட விரும்புவதாக கூறி மனு ஒன்றை அளித்தார்.
தற்போது கட்சியில் ஜி.கே.வாசன் கையே ஓங்கியிருப்பதால் நளினிக்கே சீட் கிடைக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications