குளித்தலை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் நீக்கம்
குளித்தலை: குளித்தலையில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் கல்வியில் பின்தங்கி இருந்த அதிருப்தி காரணமாக வெடி குண்டு மிரட்டல் விடுத்தார்.
இதனால் அவரை பள்ளியில் இருந்து நீக்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குளித்தலையில் உள்ள பாரதி வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் 22 மற்றும் 29 ம் தேதிகளிலும், கடந்த 15 ம் தேதியும் மர்ம போன் மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போது போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தி போன் தகவல் புரளி என்பதை உணர்ந்தர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு நான்காவது முறையாக மர்ம போன் வந்துள்ளது. அப்போது போனில் பேசிய மர்ம குரல் பள்ளிக்கு விடுமுறை அளிக்காவிட்டால் குண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு லைன் துண்டிக்கப்பட்டது.
இது குறித்து குளித்தலை டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தியிடம் பள்ளி தாளாளர் புகார் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன், எஸ்.ஐ. ஸ்ரீதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், நான்காவது முறையாக வந்த அழைப்பு, முசிறியில் உள்ள ஜெயன் சலூனில் இருந்து வந்துள்ளது தெரிய வந்தது.
உடனடியாக அங்கு போலீசார் விசாரணை செய்த போது அருகில் சுண்ணாம்புக்கார தெருவில் வசிக்கும் மாணவன் அரவிந்தன் (14), என்பவன் இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஒன்பதாவது படிக்கும் மாணவன் அரவிந்தன், கல்வியில் பின்தங்கி இருந்ததால், சமீபத்தில் வகுப்பில் செக்ஷன் மாற்றி அமர்த்தப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெடி குண்டு மிரட்டல் விடுத்தாக ஒப்புக் கொண்டார். மாணவன் அரவிந்தன், தந்தை சின்னையா மற்றும் உறவினர்கள் மன்னிப்புக் கோரினர்.
இதனையடுத்து, மாணவன் அரவிந்தன் எதிர்கால நலன் கருதி மன்னிப்பு வழங்கி பெற்றோரிடம் அவரை ஒப்படைக்க எஸ்.பி. தினகரன் உத்தரவிட்டார். இதன்படி பெற்றோரிடம் அரவிந்தன் ஒப்படைக்கப்பட்டார்.
ஆனால், பள்ளி நிர்வாகம் மாணவன் அரவிந்தனை பள்ளியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications