ரீட்டா வீட்டை எரித்தவருக்கு மாயாவதி 'பரிசு'!
டெல்லி: உ.பி. காங்கிரஸ் தலைவி ரீட்டா பகுகுணா ஜோஷியின் வீட்டை எரித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கு, வாரியத் தலைவர் பதவி அளித்து கெளரவித்துள்ளார் முதல்வர் மாயாவதி.
முதல்வர் மாயாவதி குறித்து தரக்குறைவாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார் ரீட்டா. இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியினர் லக்னோவில் உள்ள ரீட்டாவின் வீட்டை தீவைத்து எரித்தனர்.
இந்த நிலையில் இந்த தீவைப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவராக கூறப்படும் பகுஜன் சமாஜ் எம்.பி. இந்தசார் அப்தி என்பவருக்கு உ.பி. மாநில சர்க்கரைக் கழக துணைத் தலைவர் பதவியைக் கொடுத்துள்ளார் மாயாவதி.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரீட்டா பகுகுணா கூறுகையில், அப்தி தலைமையிலான கும்பல்தான் எனது வீட்டைத் தீவைத்துக் கொளுத்தியது.
இந்த நிலையில், இப்போது அப்திக்கு பரிசளிப்பது போல பதவியைக் கொடுத்துள்ளார் மாயாவதி. இதன் மூலம் தீவைப்பு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் வாதத்திற்கு வலு சேர்ந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியினர்தான் வீட்டை எரித்தனர் என்பதும் நிரூபணமாகியுள்ளது. உடனடியாக தீவைப்பு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மாயாவதியிடமிருந்து நீதி கிடைக்கும் என நான் நம்பவில்லை. சிபிஐ விசாரணையில் மட்டுமே நீதி கிடைக்கும். இதை நான் மட்டும் சொல்லவில்லை, எனது கட்சியும் வலியுறுத்துகிறது. அரசே தூண்டி விட்டுத்தான் எனது வீட்டைக் கொளுத்தினர்.
நான் மாயாவதி குறித்து கருத்துக் கூறியபோது கூறிய ஒரு வார்த்தையால் எனது கட்சித் தலைமை தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதற்காக வருத்தப்படுகிறேன். தனிப்பட்ட யாரையும், எந்த ஜாதியையும் இழிவுபடுத்தும் வகையில் நான் பேசவில்லை.
நான் சொன்னதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் உ.பி. அரசு செயல்படும் விதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications