இடைத் தேர்தலிலும் அதிமுகவுடன் உறவு தொடரும் - நல்லகண்ணு
தூத்துக்குடி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதிமுகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. சட்டசபை இடைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்று கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
தூத்துக்குடி வந்த நல்லகண்ணு அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறுகையில்,
சட்டப்பேரவை இடைத்தேர்தலை பொருத்தவரை அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடரும். இது தொடர்பாக ஜூலை 29, 30 தேதிகளில் திருச்சியில் நடைபெறும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுக கூட்டணியில் நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இன்னும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டிய நிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இடதுசாரிகளின் பலம் குறைந்துவிட்டதால், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அரசு முயன்று வருகிறது. இதன் மூலம் முழு அதிகாரமும் தனியாரிடம் போய்விடும். வேலைவாய்ப்பு குறையும். தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். உற்பத்தி குறையும்.
இந்திய கம்யூ கட்சி ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும். மத்தியில் காங் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வரும் தண்ணீர் கடந்த ஜூன் மாதமே வரவேண்டியது. ஆனால் தற்போதுதான் வந்துள்ளது.
இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பின்தங்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதி நீர் பிரச்சனையில் இறுதி தீர்ப்பு வந்த பிறகும் கூட அதனை அமுல்படுததவில்லை. இதனை உடனே அமுல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் முழுமையாக சமசீர் கல்வி முறை அமுல்படுத்தவேண்டும். கல்வி நிறுவனங்களில் கட்டாய நிதி வசூல் தடுக்கப்பட வேண்டும்.
இதனை வலியுறுத்தி இந்திய கம்யூ கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றார் அவர்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications