நக்ஸல் ஊடுருவல்: போலீஸ் மீது காங். பாய்ச்சல்

சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரி்க்கைகள் மீது நடந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம் பேசுகையில்,
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரி்ல் திரைப்படத் துறையினர் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் தமிழ்நாட்டுக்குள் வர முடியாது என்று மிரட்டினார்கள். ஆனால், அவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டுக்கு வந்து போனார்கள். பிரிவினைவாதம் பேசியவர்களை மக்கள் புறக்கணித்து தேர்தலில் வெற்றி தேடித் தந்தார்கள்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் ஊடுருவினார்கள். அவர்களை உளவுத்துறை முன்பே தடுத்து நிறுத்தியி்ருக்க வேண்டும். இந்த ஊடுருவலுக்கு காவல்துறையின் திறமை குறைவே காரணம். தமிழகத்தை அமைதிப் பூங்காவாக்க காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.
ரயிலைக் கடத்தியது யார் என்பதை விரைவில் வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவது மிகவும் தவறான செயல். வேலியே பயிரை மேய்வது கண்டிக்கத்தக்கது. அத்தகைய அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
கோவில், தேவாலாயங்களி்ல் கொள்ளைகள் நடக்கின்றன. அதைத் தடுக்க வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பை அரசு அதிகரிக்க வேண்டும்.
கோவையில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுபான விற்பனை ரூ. 10,000 கோடியை தாண்டியிருப்பது நல்ல வளர்ச்சி அல்ல. இதனால் இளைஞர்களின் எதி்ர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. குடிப்பழக்கத்தைக் குறைக்க மாற்று வழிகளை அரசு யோசிக்க வேண்டும்.
நாட்டில் நல்லாட்சி நிலவ காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக இருந்ததால் தான் முடியும். இதனால் காவல்துறையினருக்கு வேண்டிய வசதிகளை அரசு செய்து தர வேண்டும். காவல்ல்துறையினரின் குழந்தைகளுக்கும் தனி பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் துவக்க வேண்டும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications