டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு-ஸ்டாலின் அறிவி்ப்பு
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று வெளியிட்டார்.
அதன்படி டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 500 ஊதியம் உயர்த்தப்பட்டு இனி அவர்கள் ரூ. 4000 சம்பளம் பெறுவார்கள்.
விற்பனையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 2400 சம்பளம் ரூ. 2800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதுதொடர்பாக மதுரையில் நடந்த டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனக் கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். இக் கோரிக்கையை அரசு ஏற்று உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
பணி நிரந்தரம், வாரவிடு முறை, சீரான இன்சென்டிவ், தேசிய பண்டிகை நாட்களில் விடுமுறை உள்ளிட்டவை வழங்க வேண்டும்.
அனுமதியின்றி பார் நடத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதற்காக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கை கைவிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications