சயனைடு அருந்தி பொட்டு அம்மன் தற்கொலை- இலங்கை பாதுகாப்பு நிபுணர்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், போரின் உச்சகட்டத்தின்போது சயனைடு அருந்தி, நந்திக் கடல் லகூன் பகுதியில் குதித்துத் தற்கொலை செய்திருக்கலாம் என இலங்கை பாதுகாப்பு நிபுணர் ரோஹன் குணரத்தனே தெரிவித்துள்ளார்.
குணரத்தனே, சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் அரசியல் வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கான சர்வதேச மையத்தின் தலைவராக உள்ளார்.
இலங்கை நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற கடைசிக் கட்ட சண்டையின்போது பொட்டு அம்மான் ராணுவத்திடம் பிடிபடுவதைத் தவிர்க்க நந்திக்கடல் பகுதியில் சயனைடு அருந்தி கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதேபோன்று அவருடைய மனைவியும் சயனைடு அருந்தியிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களுடைய உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புலிகள் தலைவர் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இடம்பெற்றுள்ளனர். தற்போது அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் வழக்கை முடிப்பதற்கு அவர்களுடைய இறப்புச் சான்றிதழை வழங்குமாறு இந்திய அரசு கோரியுள்ளது.
புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்.
விடுதலைப் புலிகளால் எந்த நேரத்திலும் இலங்கைக்கு மீண்டும் ஆபத்து வரலாம். அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொண்டு அவர்களை கட்டுப்படுத்தாத வரையில் இலங்கைக்கு அச்சுறுத்தல் இருப்பது நிச்சயம் என்றார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications