விடைத்தாள் மோசடி-டாக்டர், மகனுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: புதுச்சேரி மருத்துக் கல்லூரியில் விடைத்தாளை மோசடியாக திருத்திய வழக்கில் பல் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் கிருபா ஸ்ரீதர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் அளித்துள்ளது.
கிருஷ்ணமூர்த்தியின் மகனான கிருபா ஸ்ரீதர் புதுச்சேரியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
அப்போது தேர்வில் சரியாக எழுதாத இவர், தனது தந்தையின் உதவியுடன், கல்லூரி ஊழியர்களை வளைத்து பெரும் பணம் கொடுத்து,விடைத்தாளை மாற்றியதாக கூறப்படுகிறது.
இதற்காக கல்லூரி அலுவலகத்தில் தனியாக ஒரு ரகசிய தேர்வை எழுதி அந்த விடைத்தாளை சேர்த்து மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தி, கிருபா ஸ்ரீதர்,
கல்லூரி ஊழியர் ஜெயராமன் மற்றும் ஒரு புரோக்கர் உள்பட 4 பேர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கும்படி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் கிருபாஸ்ரீதர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை முதலில் நீதிபதி ரகுபதி விசாரித்தார். அப்போது மத்திய அமைச்சர் ஒருவர் தன்னை வலியுறுத்தி, கிருஷ்ணமூர்த்தி, கிருபாஸ்ரீதருக்கு முன்ஜாமீன் வழங்குமாறு நிர்ப்பந்தப்படுத்தியதாக புகார் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு எழுந்தது.
இதையடுத்து இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி நீதிபதி ரகுபதி விலகிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி ஜெயபால் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. அவர் இன்று இந்த மனு மீது தீர்ப்பு வழங்கினார்.
கிருஷ்ணமூர்த்தியும், கிருபா ஸ்ரீதரும் சென்னையில் தங்கியிருந்து தினமும் காலை மற்றும் மாலையில் சி.பி.ஐ. அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டும்.
நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. இருவரும் தலா ரூ.1 லட்சத்துக்கு ஜாமீன் தொகை வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து முன்ஜாமீன் வழங்கினார்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications