இடைத்தேர்தல் வெட்டி வேலை-ராமதாஸ்
சென்னை: இடைத்தேர்தல் என்பது வீண் வேலை. அதற்குப் பதிலாக திமுகவே அந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
அதிமுக தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்த பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் அதிகாரியே ஒப்புக்கொண்டு, அதைத் தடுக்க முடியவில்லை என்று சொல்லும்போது தேர்தல் என்பது எதற்கு?
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி வெற்றி பெறுவதை ஆளுங்கட்சியான திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்குப் பதிலாக ஆளும் கட்சியே இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம்.
நடைபெறவுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் பணம் விளையாடும். எனவே தேர்தல் புறக்கணிப்பு நல்ல முடிவு. இதன் மூலமாக எதிர்காலத் தேர்தல்களில், பணநாயகம் தலை தூக்காமல் உண்மையான, நேர்மையான தேர்தல் நடப்பதற்கு நாம் வழி வகை காண வேண்டும்.
தேர்தலில் பணம் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தத் தேர்தல் செல்லாது என்று அன்றைக்கே அறிவிப்பதற்கான வழிமுறையும் காணப்பட வேண்டும்.
எனவே, மற்ற எதிர்க்கட்சிகளு போட்டியிடாமல் புறக்கணிக்க முன்வர வேண்டும் என்றார் ராமதாஸ். இது தேமுதிகவுக்கு ராமதாஸ் விடுக்கும் கோரிக்கையாகக் கருதப்படுகிறது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications