கம்யூனி்ஸ்ட்களும் புறக்கணிக்க வேண்டும்-ராமதாஸ்
நெல்லை: கம்யூனிஸ்ட் கட்சிகளும்ம் இடைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
நெல்லையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இடைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்து இருக்கிறோம். அதிமுக செயற்குழு கூட்டத்தில் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதே போல மார்க்சிஸ்ட் கம்யூ, இந்திய கம்யூ ஆகிய கட்சிகளும் இடைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.
ஒட்டு மொத்த எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இது எதை காட்டுகிறது, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்விகளை மக்கள் பிரச்சனைகள் தீர்மானிக்கும். டெல்லியில் ஒரு முறை நடந்த தேர்தலில் வெங்காய விலை வெற்றி தோல்விகளை தீர்மானித்தது. அதேபோல 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில் அரிசி பிரச்சனை தீர்மானித்தது. ஆனால் தற்போது பணபலம், ஆளும்கட்சியின் அதிகார தூர்பிரவேசம், கள்ளஓட்டு, ஆளும்கட்சியின் ஆஜராகம் போன்றவை வெற்றியை தீர்மானிக்கிறது.
மேலும் தற்போது கூடுதலாக வாக்கு பதிவு எந்திரத்தில் ஊழல், தேர்தல் ஆணைத்து எல்லாம் தெரிந்தும் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அப்படி என்றால தேர்தல் ஆணையம் எதற்கு. மாநில முதலமைச்சர்களே தேர்தலை நடத்தலாம். தேர்தல் ஆணையம் நினைத்தால் முறைகேடுகளை தடுக்க முடியும்.
தலைமை தேர்தல் அதிகாரியான டிஎன் சேஷன் இருந்த போது தனித்து நின்று சாதித்து காட்டினார். தற்போது 3 ஆணையர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நாணயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த முடியவில்லை என்றார் ராமதாஸ்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ராமதாஸ் அளித்த பதில்கள்...
கேள்வி: 2011ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாமகவின் நிலை என்ன?
பதில்: தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். பணம் கொடுத்து வாக்குகளை வாக்குவதை தடுப்பதற்கு என்ன வழி என்பதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். சட்ட திட்டங்களை தேர்தல் ஆணையம் கடுமையான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து பாமகவின் கொள்கையில் மாற்றம் ஏற்படுமா..?
பதில்: பாமக கொள்கை அளவில் எந்த மாற்றமும் இல்லை. பாமகவை பொறுத்தவரை சமூக நீதிக்காக போராடி வரும் கட்சி என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications