இந்தியா-சீனா எதிரிகள் அல்ல: எஸ்.எம்.கிருஷ்ணா
புக்கெட்: தாய்லாந்து சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இந்தியாவும், சீனாவும் எதிரிகள் அல்ல, மாறாக நெருங்கிய கூட்டாளிகள் என்று கூறியுள்ளார்.
இந்திய - ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்து நாட்டின் புக்கெட் தீவில் நடக்கிறது.
இதற்காக சென்றுள்ள கிருஷ்ணா, அங்கு சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜியேச்சியுடன் பேசினார். பின்னர் இந்திய செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சீனாவும், இந்தியாவும் பகையாளிகள் அல்ல. மாறாக நெருங்கிய கூட்டாளிகள் ஆவர்.
பொருளாதாரம், வர்த்தகத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கலாம். ஆனால் இரு நாடுகளும் எதிரிகள் அல்ல. இந்தியாவும், சீனாவும் தனித் தனிப் பாதையில் வளர போதிய வாய்ப்புகள் உள்ளன.
சீன அமைச்சருடன் நடந்த பேச்சு உபயோகரமானதாக இருந்தது. தோழமையுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை மேலும் ஆழப்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்தோம்.
சீனாவால் இந்தியாவுக்கு எந்தவிதமான மிரட்டலும் இல்லை. நீடித்த நட்பு மற்றும் கூட்டுத்தன்மையை பேணிக் காக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை சீன அமைச்சரிடம் தெரிவித்தேன்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இந்த ஆண்டு இறுதியில் சீனா செல்லவுள்ளார். அதை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக சீன அமைச்சர் தெரிவித்தார் என்றார் கிருஷ்ணா.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications