Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாயா-லாலு-ஜோஷி பாதுகாப்பு வாபஸ்: நாடாளுமன்றத்தில் அமளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு என்எஸ்ஜி கமாண்டோ படை பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

டெல்லியில் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட குழு கூட்டம் அதன் செயலாளர் ஜி.கே.பிள்ளை தலைமையில் நடந்தது. அதில், உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்பட 200 பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் என்எஸ்ஜி இசட் பிரிவு பாதுகாப்பை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.

இவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாததால் சாதாரண பாதுகாப்பே போதுமானது என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்ததன் அடிப்படையில் உள்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆனால், இதைக் கண்டித்து இன்று பகுஜன் சமாஜ்,
சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாஜக எம்பிக்கள் இன்று மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் மக்களவை இரு முறையும் மாநிலங்களவை ஒரு முறையும் ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில்,
எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நீங்கள் சொன்னால் எங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதன் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள். என் மனைவி ராப்ரிதேவிக்கு பாதுகாப்பை வாபஸ் பெறப்போவதாக வந்துள்ள அறிவிப்பு எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவருக்கு பாதுகாப்பே அளிக்கப்படவில்லையே, அப்படி இருக்கையில் எந்த பாதுகாப்பை திரும்ப பெறப்போகிறீர்கள் என்றார்.

முலாயம் சிங் யாதவ் பேசுகையில், நான் எனக்கு பாதுகாப்பு எதுவும் கேட்கவில்லை. ஆனால் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு பிறகு, மத்திய அரசே முன்வந்து பாதுகாப்பு அளித்து வருகிறது. மும்பை, ஹைதராபாத், ராய்பூர் ஆகிய இடங்களில் என்னைக் கொல்ல தாக்குதல்கள் நடந்தன. ஒருமுறை பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டுக் கொண்டிருந்தபோது என்னை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி நடந்தது. அவற்றில் எல்லாம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.

எனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை வாபஸ் பெறுவதோ, குறைப்பதோ என்னை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல், எனக்கு எதிரான சதியும் ஆகும். என்னைப் போன்று சமூக நீதிக்கு பாடுபடுகிறவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை குறைக்க முடிவு எடுத்திருப்பது எங்களை அவமதிப்பது ஆகும். எங்களது வாழ்க்கையை ஆபத்தான நிலைக்கு தள்ளுகிறீர்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. உள்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சர் சிதம்பரம், மத்திய அரசு தான் இதற்கு பொறுப்பு என்றார்.

ஆனால், அவையில் இருந்த ப.சிதம்பரம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர மறுத்துவிட்டார்.

மக்களவை இரு முறை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடியபோது பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தலைவர்களின் பாதுகாப்பை வாபஸ் பெறும் திட்டம் ஏதுமில்லை என்றார்.

இதையடு்த்துப் பேசிய முலாயம் சி்ங் யாதவ், உத்தரப் பிரதேசத்தில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதால் எனது கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களுக்கும் என்எஸ்ஜி பாதுகாப்பு வழங்க வேண்டு்ம் என்றார்.

இதைத் தொடர்ந்து சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் அமளி நிலவியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+