கிருஷ்ணராஜசாகர் அணை-நாளை எதியூரப்பா பூஜை

கர்நாடகத்திலும் கேரளத்திலும் காவிரி ஆற்றின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கபிணி அணை கடந்த வாரம் நிரம்பியது. இதையடுத்து அணையைக் காக்க உபரி நீரே மேட்டூர் அணைக்கு திறந்து விட்டு்ள்ளது கர்நாடகம்.
அதே போல காவிரியின் உப நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஹாரங்கி, ஹேமாவதி அணைகளும் நிரம்பிவிட்டன. இந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மைசூர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அந்த அணையும் நேற்றிரவு நிரம்பிவிட்டது.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளவு 124 அடியாகும். நேற்று காலை 123.90 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இரவில் முழு அளவைத் தொட்டுவிட்டது.
இதையடு்த்து இந்த அணையில் இருந்தும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பினால் அங்கு கர்நாடக அரசின் சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
இந் நிலையில் கர்நாடக முதல்வர் எதியூரப்பா நாளை கிருஷ்ணராஜசாகர் அணையில் சிறப்பு பூஜைகளை நடத்தவுள்ளார்.
மேட்டூர் நீர்மட்டம் 88அடியாக உயர்வு:
இதற்கிடையே மேட்டூர் அணையின் நீர் மட்டம் 88 அடியை தொட்டுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 38,548 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்து. அணையில் இருந்து சேலம் மாவட்ட குடிநீர் தேவைக்கு மட்டும் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர்
வெளியேற்றப்படுகிறது.
இந்த அணையிலிருந்து அடுத்த மாதம் காவிரி டெல்டா சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது குறி்ப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications