ஆவின் பால் விலை உயருமா?
சென்னை: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் நுகர்வோருக்கு அரசு விற்கும் பாலின் விலை உயர்த்தப்படுமா என்று தெரியவில்லை.
சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தபோது பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் பாலைக் கொட்டி அவர்கள் நடத்திய போராட்டத்தைக் கண்டித்த முதல்வர் கருணாநிதி, சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பின் இது குறித்துப் பேசலாம் என்றார்.
சட்டப் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம், பால் உற்பத்தியாளர் நலச் சங்க உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, மதிவாணன், எ.வ.வேலு ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இரு சுற்றுப் பேச்சு நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தலைவர் செங்கோட்டு வேலன் கூறுகையில்,
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வு குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். ஓரிரு நாளில் நல்ல பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் தலைவர் முகமது அலி கூறுகையி்ல், பசும்பாலுக்கு லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப் பாலுக்கு 6 ரூபாயும் கூடுதலாக வழங்க வேண்டும் என்று கேட்டோம். பேச்சுவார்த்தை முடிவில் இதை ரூ. 3, ரூ.5 என்றாவது வழங்குமாறு கோரிக்கை வைத்தோம். முதல்வரிடம் பேசி, மீண்டும் எங்களை அழைத்து பேச்சு நடத்துவதாக கூறியிருக்கிறார்கள். விரைவில் நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதற்கிடையே 1 லிட்டர் பசும் பாலுக்கு ரூ. 2ம், எருமைப் பாலுக்கு ரூ. 5 என கொள்முதல் விலை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி பசும் பால் கொள்முதல் விலை ரூ. 13.50லிருந்து ரூ. 15.50 ஆகவும், எருமைப் பால் கொள்முதல் விலை ரூ. 18லிருந்து ரூ. 23 ஆகவும் உயரும்.
இந்த கொள்முதல் விலை உயர்வு இடைத் தேர்தல் முடிந்த பிறகே அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
பாலை அதிக விலை கொடுத்து வாங்குவதால் அதை ஆவின் மூலம் நுகர்வோருக்கு விற்கும் விலையை அரசு உயர்த்துமா அல்லது பழைய விலைக்கே தருமா என்று தெரியவில்லை.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?












Click it and Unblock the Notifications