ஜாக்சன் மரணத்தில் திருப்பம் - டாக்டர் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு

ஜாக்சன் மரணத்திற்கான முக்கிய ஆதாரங்கள் கான்ராடின் அலுவலகத்தில் இருக்கக் கூடும் என்று போலீஸார் நம்புகின்றனர்.
மைக்கேகல் ஜாக்சன் மரணமடைந்தபோது கடைசி நேரத்தில் அவருடன் இருந்தவர் இந்த டாக்டர்தான். இவர் கடைசி நேரத்தில் போட்ட ஊசிகளும், கொடுத்த மருந்துகளும்தான் உயிரைப் பறித்ததாக ஒரு சந்தேகம் உள்ளது. இதனால்தான் இவரை ஆரம்பத்தில் விசாரித்த போலீஸார் தொடர்ந்து தங்களது சந்தேக வளையத்தில் வைத்துள்ளனர்.
இந்த சந்தேகம் வலுக்க காரணம், ஜாக்சன் குடும்பத்தினர் அவரது மரணம் குறித்த தகவல் அறிந்து வீட்டுக்கு வருவதற்குள் இந்த டாக்டர் அங்கிருந்து வேகமாகப் போய் விட்டார் என்பதே.
ஆரம்பத்தில் ஓவர் டோஸ் மருந்துகளால் ஜாக்சன் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இப்படித்தான் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் கூறுகிறது. ஆனால் தற்போது ஜாக்சன் மரணத்தை கொலையாக கருதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காரணம், ஜாக்சனுக்கு கொடுக்கப்பட்ட புரோபோபால் என்ற மயக்க மருந்து அதிக அளவில் அவருக்கு செலுத்தப்பட்டுள்ளதால் இந்த சந்தேகம் வலுத்துள்ளது.
டாக்டர் கான்ராட் முர்ரேவின் அலுவலகத்தை போதைப் பொருள் தடுப்பு ஏஜென்சியைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள், போலீஸார், எப்பிஐ அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.
டாக்டரின் அலுவலகத்தில் இருந்த மருத்துவ ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி முழுமையாக ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே, டாக்டரின் வக்கீல் செர்னாப் தனது இணையதளத்தில் கூறுகையில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்து எதையும் டாக்டர் கான்ராட், ஜாக்சனுக்குப் பரிந்துரைத்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும், ஜாக்சனுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள், கொடுக்கப்பட்ட மருந்துகள் குறித்த ஆவணங்களை டாக்டரிடமிருந்து பெற போலீஸார் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் கடைசி நேரத்தில் டாக்டர் கான்ராட் ஜாக்சனுக்கு சிகிச்சை அளித்ததால் தற்போது பழி அவர் பக்கம் திரும்பியுள்ளதாக வக்கீல் செர்னாப் கூறுகிறார்.
போலீஸார் ஏற்கனவே டாக்டர் கான்ராடை 2 முறை விசாரித்துள்ளனர். அவரது காரையும் பறிமுதல் செய்து ஆய்வு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications