ஜெ. மீதான லண்டன் ஹோட்டல் வழக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான லண்டன் ஹோட்டல் வழக்கில், ஜெயலலிதா தரப்பு உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட பெங்களூர் தனி கோர்ட், விசாரணையை, ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது சொத்துக் குவிப்பு மற்றும் லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான இரு வழக்குகள் தொடரப்பட்டன. இவை இரண்டும் தற்போது பெங்களூர் தனி கோர்ட்டில் விசாரணையில் உள்ளன.
இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டு வழக்குகளும் விசாரிக்கப்படாமல் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன.
இதையடுத்து லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற திமுக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் பெங்களூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஹோட்டல் வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பான காரணங்களைக் கூறும் ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதி, இதற்கு முன் ஆவணங்கள் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால் ஜூலை 23ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல நீதிமன்றங்களில் ஆவணங்கள் கொடுக்கப்பட்டு இருப்பதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கூறினார்.
ஆனால் இதை ஏற்காத நீதிபதி, வாய்மொழியாக கூறக் கூடாது. ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கும்படி கூறி, விசாரணையை ஆகஸ்ட் 27க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications