துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி
சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சட்டத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகனிடமிருந்து சமீபத்தில்தான் பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டது. இதனால் அவர் மன வருத்தத்துடன் இருந்ததாக கூறப்பட்டது. சட்டசபையிலும் கூட அவர் முன்பு போல கலகலப்பாக இல்லை.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் முதல்வர் தலைமையில் நடந்த கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சியில் துரைமுருகன் கலந்து கொண்டார்.
பின்னர் வீடு திரும்பிய அவருக்கு நெஞ்சு வலியும், மயக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது துரைமுருகனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு துரைமுருகனுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்தது. சில மாதங்களுக்கு முன்பும் அவருக்க மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை நடந்து உடல் நலம் தேறினார் என்பது நினைவிருக்கலாம்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications