Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுரோட்டில் பெண் மானபங்கம்-கும்பல் அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பாட்னாவில் இளம் பெண்ணை ஒரு கும்பல் நடுரோட்டில் உடைகளைக் கலைந்து மானபங்கம் செய்தது. இதை நூற்றுக்கணக்கானவர்களுடன் சேர்ந்து போலீசாரும் வேடிக்கை பார்த்த கொடுமையும் நடந்தது.

நகரின் முக்கிய பகுதியா காந்தி மைதான் பகுதியில் சுமார் 2 மணி நேரம் இந்தக் கொடுமை நடந்தது.

ராகேஷ் என்ற ஒரு நபர் இந்தப் பெண்ணை பாட்னாவுக்கு அழைத்து வந்து ஹோட்டலில் தங்கியுள்ளார். பின்னர் தன் நண்பர்களையும் வரவழைத்துக் கொண்டு அனைவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பியோடிய அந்தப் பெண்ணை ரேட்டில் விரட்டிச் சென்ற அந்தக் கும்பல் உடைகளைக் களைந்து.

அவரை திருட்டுப் பெண் என்று கூறி மானபங்கம் செய்ததோடு கடுமையாகவும் தாக்கினர். ரோட்டில் அவர் ஓட ஓட அவரைக் இந்தக் கொடுமைக்கு ஆளாக்கியது அந்தக் கும்பல்.

இது குறித்து பிகார் கூடுதல் டிஜிபி நீலாமணி கூறுகையில், அந்தப் பெண் விபச்சாரத் தொழில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் ஒருவர் மட்டும் முதலில் வந்துவிட்டு பின்னர் கும்பலாக வந்து கற்பழிக்க முயன்றதும் கூடுதல் பணம் கேட்டுள்ளார். அதை அந்தக் கும்பல் தர மறுக்கவே தப்பியோடியுள்ளார். அப்போது தான் இந்தக் கொடுமையை அந்தக் கும்பல் செய்துள்ளது.

ஆனால், அவரை உல்லாசத்துக்காக கூட்டி வந்த ராகேஷ், தன்னை அந்தப் பெண் தவறான உறவுக்கு அழைத்ததாக கதையைக் கட்டிவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளான் என்றார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தான் துகிலுறியப்படுவதை வேடிக்கை பார்த்தவர்களிடம், ஜார்க்கண்ட் மாநிலம் ஜசிதியில் இருந்த என்னை ராகேஷ் தான் செல்போனி்ல் பாட்னாவுக்கு வரச் சொன்னார். அவரது தொலைபேசி அழைப்பைப் பார்த்தாலே அது தெரியும் என்று அழுதபடியே கூறவே, அந்தக் கும்பல் தப்பியோட முயன்றது.

இதையடுத்து அதுவரை வேடிக்கை பார்த்த பொது மக்களும் போலீசாரும் சேர்ந்து ராகேஷை அடித்து உடைத்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மாநில அரசிடம் தேசிய பெண்கள் உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், பணியில் இருந்த போலீசார் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தகைய வெட்ககரமான சம்பவமே நடந்திருக்காது. பணியில் மெத்தனமாக இருந்த அந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கச் செய்வோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+