ஒரிசா சட்டசபைக்குள் புகுந்த பாம்பு பாதுகாவலரை கடித்தது
புவனேஸ்வர்: ஒரிசா மாநில சட்டசபைக்குள் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு, துணைப் பாதுகாவலரை கடித்து விட்டது.
ஒரிசா சட்டசபைக்குள் சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதைக் கண்டு பிடிக்க முடியாமல் பாப்பாடிகள் திணறினர். இந்த களேபரம் காரணமாக ஒரு நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பிடிக்க சட்டசபை பாதுகாவலர்கள் முயன்றனர். அப்போது துணைப் பாதுகாவலர் ஒருவரை பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அந்த பாம்பை பாம்பாட்டிகள் வளைத்துப் பிடித்தனர். நேற்று சட்டசபைக் கூட்டம் பாம்பாட்டிகள் துணையுடன் நடந்தது. கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் ஒரு இருக்கையின் கீழே பாம்பு நெளிவதை பாம்பாட்டிகள் பார்த்து விட்டனர்.
இதையடுத்து விரைந்த பாம்பாட்டிகள் அந்தப் பாம்பைப் பிடித்தனர். இது சாதாரண விஷம் இல்லாத பாம்பு என்று பாம்பாட்டி மாலிக் என்பவர் கூறினார். பாம்பு முதலில் மாலிக்கைக் கடித்துள்ளது. பின்னர்தான் துணைப் பாதுகாவலரான அமியா சத்பதி என்பவரைக் கடித்தது.
மாலிக்குக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் சத்பதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வழியாக பாம்பு பிடிபட்டு விட்டதால் சட்டசபை வட்டாரம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது. இருப்பினும் இது ஏற்கனவே உள்ளே நுழைந்த பாம்பா அல்லது வேறு புதுப் பாம்பா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications