ஆடிப்பெருக்கு: ஜூலை 28ம் தேதிய மேட்டூர் அணை திறக்கப்படுகிறது
சென்னை: ஆடிப் பெருக்கு விழாவையொட்டி ஜூலை 28ம் தேதியே மேட்டூர் அணையைத் திறக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 7ம் தேதியன்று நீர்ப்பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
ஆனால் ஆடிப் பெருக்கு வருவதால் அதற்கு வசதியாக முன்கூட்டியே காவிரியில் நீர் திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று ஜூலை 28ம் தேதியே அணை திறக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
21.7.2009 அன்று தமிழக சட்டமன்ற பேரவையில் நான் படித்தளித்த அறிக்கையில்- காவேரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து 7.8.09 முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்பதை அறிவித்தேன்.
இருந்த போதிலும்- பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று- அவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ஆடிப்பெருக்கினை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி அன்றே மேட்டூர் அணை திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
90 அடியைத் தாண்டியது நீர்மட்டம்...
இதற்கிடையே, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியைத் தாண்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிக அளவில் உள்ளதால் விரைவில் அணை 100 அடியைத் தாண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications