பாங்க் ஆப் பரோடா லாபம் 85% உயர்வு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா ஜூன் 30ம் தேதியுடன் முடியும் காலாண்டில் அதிகபட்ச லாபம் ஈட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 85 சதவீத கூடுதல் லாபம் பெற்றுள்ளது இந்த வங்கி.
கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் இந்த வங்கியின் நிகர லாபம் ரூ.370.86 கோடி. ஆனால் இந்த காலாண்டில் அது ரூ.685.38 கோடியாக உயர்ந்துள்ளது. பரோடா வங்கியின் சமீப கால காலாண்டு முடிவுகள் மிக உயர்ந்த லாபம் இந்த முறைதான் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த வங்கியின் மொத்த லாபத்திலும் 22 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ 3,293.82 ஆக இருந்த லாபம், இந்த ஆண்டு ரூ. 4,032.11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வங்கியின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் ரூ.420.60-க்கு கைமாறின.












Click it and Unblock the Notifications