நீர்மட்டம் 93 அடி-மேட்டூர் அணை நாளை திறப்பு
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93 அடியைத் தாண்டியுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி நாளை அணை திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை இந்த ஆண்டு திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி திறக்கப்படவில்லை. அணையில் போதிய தண்ணீர் இல்லாததும், கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததுமே இதற்குக் காரணம்.
இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி விட்டன.
இதையடுத்து கிருஷ்ணராஜசாகர், கபிணி அணையிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்தத் தண்ணீரின் வரத்தால், மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 93.15 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 27,815 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
ஏற்கனவே அணை நாளை திறக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி நாளை அணை திறக்கப்படுகிறது.
அடுத்த மாதம் திறக்கப்படுவதாக இருந்த அணை, ஆடிப் பெருக்கு விழாவையொட்டி நாளையே திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications