தொண்டாமுத்தூரில் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு- ஜெ. முடிவுக்கு பின்னணி என்ன?

கம்பம், இளையாங்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்து விட்டது.
இந்த ஐந்தில், கம்பம், தொண்டாமுத்தூர் ஆகியவை மதிமுக வசம் இருந்தவை. இளையாங்குடியில் திமுக ஜெயித்திருந்தது. பர்கூரில் அதிமுகவும், ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸும் வென்றிருந்தன.
இந்த சட்டசபைத் தொகுதிகளில் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளைப் பார்க்கும்போது ஒரு உண்மை புலப்படுகிறது.
பர்கூரில்..
அதாவது, அதிமுக வெற்றி பெற்றிருந்த பர்கூர் தொகுதியில், லோக்சபா தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்...
இ.ஜி. சுகவனம் (தி.மு.க.) - 53,572.
நஞ்சே கவுடு (அ.தி.மு.க.) - 48,209.
அன்பரசன் (தே.மு.தி.க.) - 18,223.
பாலகிருஷ்ணன் (பா.ஜ.க.) - 1740.
அதாவது திமுக இங்கு லோக்சபா தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக வசம் இருந்து வந்த இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நஞ்சே கவுடு 2வது இடத்தைத்தான் பிடித்துள்ளார். தேமுதிக வேட்பாளர் அன்பரசன் அதிமுக வாக்குகளைப் பிரித்ததால் வந்த வினை இது.
கம்பத்தில்...
ஜே.ம் ஆரூண் (காங்கிரஸ்) - 62,402.
தங்கதமிழ் செல்வன் (அ.தி.மு.க.) - 54,028.
சந்தானம் (தே.மு.தி.க.) - 10,608.
பார்வதி (பா.ஜ.க.) - 1501.
மதிமுக வசம் இருந்து வந்த இந்தத் தொகுதியில் காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுகவுக்கு 2வது இடமே. இங்கும் தேமுதிகவின் வாக்குப் பிரிப்பு அதிமுக வெற்றி வாய்ப்பில் விளையாடி விட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில்...
ஜெயதுரை (தி.மு.க.) - 56,505.
சிந்தியா பாண்டியன் (அ.தி.மு.க.) - 35,806.
சுந்தர் (தே.மு.தி.க.) - 8347.
சரவணன் (பா.ஜ.க.) - 5243.
இந்தத் தொகுதியிலும் அதிமுகவுக்கு 2வது இடமே கிடைத்துள்ளது. திமுக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. இங்கு தேமுதிகவால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
தொண்டாமுத்தூரில்...
இங்கு மட்டும்தான் அதிமுகவின் கை ஓங்கியிருந்தது.
கே.சுகுமார் (அதிமுக) - 55,655.
சண்முகசுந்தரம் (தி.மு.க.) - 41,015.
தங்கவேல் (தே.மு.தி.க.) - 9172.
பாபா ரமேஷ் (பா.ஜ.க.) - 5550.
இந்தத் தொகுதியில், அதிமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த முறை இருந்த இளையாங்குடி தொகுதி, மறு சீரமைப்பின் கீழ் நீக்கப்பட்டு விட்டதால் லோக்சபா தேர்தலில் அந்தத் தொகுதி இல்லை (தற்போதையை இடைத் தேர்தல் பழைய தொகுதிகளின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது).
இப்படி நான்கு தொகுதிகளிலும் அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே லோக்சபா தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிலும் விசேஷமாக தற்போது அதன் வசம் இருந்து வரும் பர்கூரில் அது தோல்வியுறும் நிலையில் உள்ளது.
இப்படி கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் தேர்தலைப் புறக்கணிக்க ஜெயலலிதா தீர்மானித்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தற்போது அதிமுகவுக்காக விழுந்த வாக்குகள் இந்த இடைத் தேர்தலில் கணிசமான அளவு தேமுதிக பக்கம் சாயும் வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை பெருமளவில் சாய்ந்தால் தேமுதிகவுக்கு ஓரிரு தொகுதிகளில் வாய்ப்பு கிடைக்கலாம்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications