பி.இ: அப்பேரல் டெக்னாலஜி, ஜியோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகளுக்கு பெரும் டிமாண்ட்!
சென்னை: பி.இ. படிப்பில் அப்பேரல் டெக்னாலஜி, ஜியோ இன்பர்மேடிக்ஸ், இன்டஸ்ட்ரியல் மேனுபேக்சரிங், மைனிங், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் டெக்னாலஜி ஆகியவற்றில் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
ஆனால், சுற்றுச்சூழல் பொறியியல், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி ஆகியவற்றில் ஒரு இடத்தைக் கூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை.
என்ஜினியரிங் கல்லூரிகளில் சேருவதற்கான முதல்கட்ட கவுன்சலிங் நாளையுடன் முடிவடைகிறது.
இந்த ஆண்டு மொத்தம் 1.5 லட்சம் பி.இ. இடங்கள் உள்ளன. இதில் நேற்று வரை அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றில் 41,623 இடங்கள் நிரம்பியுள்ளன.
முதல் கட்ட கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்ட மாணவர்களில் 12,105 பேர் (22 சதவீதம் பேர்) வரவில்லை.
பி.இ. படிப்பில் 44 பிரிவுகள் உள்ள நிலையில் அப்பேரல் டெக்னாலஜி, ஜியோ இன்பர்மேடிக்ஸ், இன்டஸ்ட்ரியல் மேனுபேக்சரிங், மைனிங், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் டெக்னாலஜி ஆகியவற்றில் தான் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
சுற்றுச்சூழல் பொறியியல், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி ஆகியவற்றில் ஒரு இடத்தைக் கூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை.
இ.சி.இ, சி.எஸ்.இ, தகவல் தொழில்நுட்பம், பயோமெடிக்கல், பயோடெக் போன்ற படிப்புகளில் மாணவிகளே அதிகம் சேர்ந்துள்ளனர்.
இந் நிலையில் 2ம் கட்ட கவுன்சலிங் ஜூலை 30 தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இந்த கவுன்சிலிங்கிற்கு பி.இ. தரவரிசைப் பட்டியலில் 'கட்-ஆப்' மதிப்பெண் 161க்கு கீழ்பெற்றுள்ள 65,000 மாணவர்கள் அழைக்கப்படவுள்ளனர்.
இதற்கிடையே, தொழிற்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. 'கட்-ஆப்' மதிப்பெண் 154.50 முதல் கடைசி 'கட்-ஆப்' மதிப்பெண் வரை பெற்ற அனைத்து தொழிற்பிரிவு மாணவர்களும் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுகின்றனர். இந்த கவுன்சலிங் மூலம் காலியாக உள்ள சுமார் 1,200 இடங்கள் நிரப்பப்படும்.
பொதுப் பிரிவு, தொழிற்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் குறித்த விவரத்தை www.annauniv.edu இணையத் தளத்தில் காணலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications