சென்னையில் இன்றும் மழை-வெப்பம் தணிந்தது
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. அதேபோல இன்றும் மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக இருந்து வந்த வெப்பம் குறைந்தது.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது. கோடை காலம் போல வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி இருந்தனர்.
அவ்வப்போது பலத்த காற்று மட்டும் அடித்து வந்தது. ஆனால் மழையே இல்லை.
இந்த நிலையில் நேற்று சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்தது. இந்த திடீர் மழையால், வெப்பம் சட்டென குறைந்து குளுமை நிலவியது.
இருப்பினும் சில புறநகர்ப் பகுதிகளி்ல் மழை இல்லை. ஆனால் குளுமையான சூழல் மட்டும் காணப்பட்டது.
இன்றும் காலை முதல் வானம் மேக மூட்டமாக இருந்தது. மாலைக்கு மேல் வானம் கருத்து, மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் நேற்றைய அளவில் இல்லாமல் இன்று சுமாரான மழையே பெய்தது.
இருந்தாலும் நேற்றும், இன்றும் பெய்த மழையால் சென்னை நகரில் வெட்கை வெகுவாகத் தணிந்துள்ளது.
முன்னதாக இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், சென்னையில் பெய்த மழையால், வெப்ப அளவு குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி வெப்பம் 37 டிகிரி பதிவானது என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் அடுத்தடுத்து 2 நாட்களாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!












Click it and Unblock the Notifications