ஏலம் போகும் அபாயத்தில் வணங்காமண் நிவாரணம்
சென்னை: புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்கு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை எடுக்க செஞ்சிலுவைச் சங்கத்தினர் யாரும் வரவில்லையாம். இதனால் அந்தப் பொருட்களை ஏலம் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய தமிழர்கள் உணவு, உடை, மருந்து என 884 டன் நிவாரண பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது.
இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் வணங்காமண் கப்பல் தத்தளித்தது. முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, 27 கன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்கள் அடைக்கப்பட்டன. அவை சென்னை துறைமுகத்தில் உள்ள சிசிடிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள், கொலராடோ என்ற சரக்கு கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றி இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க கடந்த 7ம் தேதி இலங்கைக்கு அனுப்பினர். இந்த கப்பல் 9ம் தேதி கொழும்பு துறைமுகம் சென்ற பின்னரும், நிவாரணப் பொருட்களை வாங்க செஞ்சிலுவை சங்கத்தினர் இதுவரை வரவில்லை. இதனால் கொழும்பு துறைமுகத்தில் நிவாரணப் பொருட்கள் கடந்த 19 நாட்களாக கேட்பாரற்று இருக்கின்றன.
இது குறித்து சம்பந்தப்பட்ட கன்டெய்னர் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் நிறுவன கன்டெய்னரில் தான் நிவாரணப் பொருட்கள் கப்பலில் இலங்கை சென்றன. நிவாரணப் பொருட்களை எடுக்க அங்குள்ள செஞ்சிலுவை சங்கத்தினர் யாரும் வராததால் எங்கள் கன்டெய்னர்களும் அங்கேயே உள்ளன.
கொழும்பு துறைமுகம் விதிமுறைகளின்படி 21 நாட்களுக்கு மேலானால், அவர்கள் அந்த பொருட்களை ஏலம் விடுவதற்கு அதிகாரம் உள்ளது.
இது தொடர்பாக வணங்காமண் கப்பல் ஏஜென்ட், டெல்லியில் உள்ள செஞ்சிலுவை சங்கம், மனிதம் மனித உரிமை அமைப்பு, லண்டனில் உள்ள மெர்ஸி மிஷன் அமைப்புக்கு தகவல் அனுப்பி உள்ளோம் என்றார்.
பாடுபட்டு ஈழத் தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் வீணாகாமல் தடுக்க தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசுடன் பேசி, இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை தமிழ் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications