திமுக - காங் வேட்பாளர்கள் மனு தாக்கல் - மனுத்தாக்கல் முடிவடைந்தது
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. இன்று திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
கம்பம், தொண்டாமுத்தூர், இளையாங்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி. நேற்று கம்பம் தொகுதி திமுக வேட்பாளர், சிபிஎம் வேட்பாளர்கள் உள்பட 31 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இன்று பர்கூர் திமுக வேட்பாளர் நரசிம்மன், இளையாங்குடி வேட்பாளர் சுப. மதியரசன் ஆகியோர் மனு தாக்கல் செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி, தொண்டாமுத்தூர் வேட்பாளர் கந்தசாமி ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.
பர்கூரில் 14 பேர்
பர்கூர் தொகுதியில் இதுவரை அதிகபட்சமாக 14 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், நரசிம்மன் (திமுக), சந்திரன் (தேமுதிக), அசோகன் (பா.ஜ.க) ஆகியோரைத் தவிர மற்றவர்கள் சுயேச்சைகள்.
கம்பம் தொகுதியில் ராமகிருஷ்ணன் (திமுக), வசந்தன் (திமுக மாற்று), அருண்குமார் (தேமுதிக), முருகேசன் (தேமுதிக மாற்று), சசிகுமார் (பா.ஜ.க), குமரன் (பா.ஜ.க மாற்று), ராஜப்பன் (சிபிஎம்) உள்பட 13 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்து தொண்டாமுத்தூரில் எம்.என்.கந்தசாமி (காங்), தங்கவேலு (தேமுதிக), சின்ராஜ் (பா.ஜ.க), ஈஸ்வரன் (கொங்கு முன்னேற்ற கழகம்) உள்ளிட்ட 11 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் இது வரை 10 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். சுடலையாண்டி (காங்கிரஸ்), சவுந்தரபாண்டியன் (தேமுதிக.), சந்தனகுமார் (பா.ஜ.க) ஆகியோரைத் தவிர மற்றவர்கள் சுயேச்சைகள் ஆவர்.
சிபிஐ வேட்பாளர் தனலட்சுமி இன்று மனுத் தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடன் வந்திருந்தார்.
இளையாங்குடி தொகுதியில், திமுக வேட்பாளர் சுப.மதியரசன், தேமுதிகவின் அழகு பாலகிருஷ்ணன், பாஜகவின் ராஜேந்திரன் உள்ளிட்ட 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications