அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாமல் உள்ள மாஜி எம்.பிக்கள்
டெல்லி: முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜெகதீஷ் டைட்லர், கன்ஷிராம் ரானா உள்ளிட்ட 36 முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.
இவர்கள் மீது வழக்கு தொடருவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சட்டப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள லூட்யென் பகுதியில் இந்த 36 பேரும் இன்னும் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்யாமல் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
மேற்கண்டவர்கள் தவிர ராம் விலாஸ் பாஸ்வான், மகாவீர் பிரசாத், காந்தி சிங் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் அடங்குவர்.
சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய நகர்ப்புற அமைச்சகம்.
இவர்களைக் காலி செய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டப் பிரிவுக்கு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் பரி்ந்துரைத்துள்ளதாம்.
இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எல்.கணேசன், ராதிகா செல்வி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மணிசங்கர் அய்யர் ஆகியோரும் அடக்கம்.
இதுதவிர காங்கிரஸ் கட்சிக்கு அலுவலகம் அமைப்பதற்காக நான்கு பங்களாக்களும், பாஜகவுக்கு 2 பங்களாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications