சென்னை நீதிபதியை மிரட்டிய அமைச்சர் - நடவடிக்கை கோரி பிரதமரிடம் எம்.பிக்கள் மனு
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டியது தொடர்பான விவகாரத்தில் வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி அவரிடம் இன்று 150க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையெழுத்திட்ட புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக இன்று பிரதமரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், 85 லோக்சபா எம்.பிக்களும், 95 ராஜ்யசபா எம்.பிக்களும் கையெழுத்திட்டிருந்தனர்.
அதில், இந்த விவகாரத்தை பிரதமர் முழுமையாக விசாரிக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெளிப்படையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
பிரதமருடனான இந்த சந்திப்பில் பாஜக, அதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த ராஜ்யசபா உருப்பினர் சந்தன் மித்ரா கூறுகையில், இதுகுறித்து விசாரித்து விட்டு பின்னர் விளக்கம் தருவதாக பிரதமர் தெரிவித்தார்.
அதேசமயம், மத்திய அமைச்சர்கள் யாரும் நீதிபதியுடன் பேசவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கூறி விட்ட நிலையில், மத்திய அரசு எப்படி இதில் தலையிட முடியும் என்றும் பிரதமர் எங்களிடம் கேட்டார் என்றார்.
-
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications