வெளியுறவு செயலாளராக நிரூபமா ராவ் பொறுப்பேற்பு

வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த சிவசங்கர் மேனன் வெள்ளிக்கிழமை பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து நிருபமா ராவ் இன்று பதவியேற்றார்.
இந்த பதவியில் நிருபமா 17 மாதங்கள் நீடிப்பார். வெளியுறவுச் செயலாளர் பதவியை வகிக்கப் போகும் இரண்டாவது பெண் நிருபமா ஆவார்.
இதற்கு முன் சோகிலா ஐயர் இந்த பதவியை வகித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர்...
நிரூபமா கேரளாவைச் சேர்ந்தவர். இவரும் மேனன் வகுப்பைச் சேர்ந்தவர்தான். இவரது கணவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அவர் கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார்.
நிரூபமா, வெளியுறவுத்துறையில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இலங்கை, சீனாவுக்கான இந்தியத் தூதராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
ஓய்வு பெற்றுள்ள சிவசங்கர மேனன் மிகச் சர்ச்சைக்குரிய வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்தார். அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம், இலங்கை விவகாரம், பாகிஸ்தான் விவகராத்தில் இவரது தலைமையிலான வெளியுறவுத்துறையி்ன் செயல்பாடு மிகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இலங்கை இனப்படுகொலையில் இவரும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான இவரது ஊரைச் சேர்ந்த எம்.கே.நாராயணனும் சேர்ந்து கொண்டு குட்டையைக் குழப்பியதாக கடுமையான புகார் உள்ளது நினைவுகூறத்தக்கது.
பாதுகாப்புத் துறைக்கு புதிய செயலாளர்:
அதே போல பாதுகாப்புத் துறையின் புதிய செயலாளராக பிரதீப் குமார் நேற்று பொறுப்பேற்றார். தற்போதைய செயலாளர் விஜய் சிங் நேற்று ஓய்வுபெற்றார்.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். கேடர் அதிகாரியான பிரீதீப், மத்திய அரசிலும் ஹரியாணா மாநில அரசிலும் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications